மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் கட்சி தனித்து போட்டி?

மும்பை: மும்பை மாநகராட்சி நிர்வாகம் 1997 முதல் 2022 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளாக பிளவுபடாத சிவசேனா கட்சி வசம் இருந்தது. மாநகராட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடைந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. அடுத்தாண்டு தொடக்கத்தில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், தங்கள் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக உத்தவ் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் சூசகமாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை விட மாநகராட்சி தேர்தலுக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. தனித்து போட்டியிட வேண்டுமென தொண்டர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடலாமா என்பது குறித்து உத்தவ் தாக்கரேவும் பிற கட்சித் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் கட்சி தனித்து போட்டி? appeared first on Dinakaran.

Related Stories: