பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்த போதிலும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள போலீசின் துரித நடவடிக்கைகளினால் கடந்த வருடங்களைப் போல் அல்லாமல் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே மண்டல பூஜையை முன்னிட்டு பக்தர்கள் இதைவிட அதிகமாக வருவார்கள் என்பதால் நெரிசலை தவிர்ப்பதற்காக வரும் 25, 26 ஆகிய தேதிகளில் தரிசனத்திற்கு கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தங்க அங்கி சன்னிதானத்திற்கு வரும் 25ம் தேதி 50 ஆயிரம் பேருக்கும், மண்டல பூஜை தினமான 26ம் தேதி 60 ஆயிரம் பேருக்கும் மட்டுமே ஆன்லைனில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய முடியும். இந்த 2 நாட்களிலும் உடனடி முன்பதிவு 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
The post 3 நாளாக 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் சபரிமலையில் டிச.25,26ல் தரிசனத்திற்கு கட்டுப்பாடு appeared first on Dinakaran.