பெங்களூரு: கர்நாடக மாநிலம் விஜயபுராவை சேர்ந்தவர் சந்த்ரம் யாகப்பா, பெங்களூருவில் கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனம் நடத்தி வந்தார். யாகப்பா (48), கவுரா பாய்(42), தீக்ஷா(12), ஜான் (14), ஆர்யா(6) விஜயலட்சுமி (36) ஆகியோர் குடும்பத்துடன் காரில் சொந்த ஊருக்கு சென்ற போது எதிரே வந்த கன்டெய்னர் லாரி கவிழ்ந்து காரில் இருந்த 6 பேரும் அந்த இடத்திலேயே பரிதாபாக உயிரிழந்தனர்.
மற்றொரு சம்பவம்: பெங்களூவை சேர்ந்த மாணவர்கள் பிரணவ், ஆகாஷ், ஆதர்ஷ் மற்றும் மாணவி பிருத்வி ஆகியோர், பெங்களூருவில் காரில் சென்ற போது மண்டியா அருகே லாரி மோதி மூன்று மாணவர்களும் பலியானார்கள். மாணவி பிருத்விக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
The post கர்நாடகாவில் கோர விபத்து ஒரே குடும்பத்தில் 6 பேர் பலி: மண்டியாவில் 3 மாணவர்கள் சாவு appeared first on Dinakaran.