பொருளாதார வாய்ப்புகள் அதிகரிப்பால் உள்நாட்டில் புலம்பெயர்வோர் எண்ணிக்கை 12% குறைந்தது: பிரதமரின் ஆலோசனை குழு தகவல்

புதுடெல்லி: பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2023ம் ஆண்டில் உள்நாட்டில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 40 கோடியே 20 லட்சத்து 90 ஆயிரத்து 396 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இது 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 11.78 சதவீதம் குறைவாகும். 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உள்நாட்டில் புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 45,57,87,621 ஆக இருந்தது. இது பொருளாதார வாய்ப்புகள் உள்ளிட்ட வசதிகள் நாடு முழுவதும் பரவலாக கிடைப்பதை காட்டுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post பொருளாதார வாய்ப்புகள் அதிகரிப்பால் உள்நாட்டில் புலம்பெயர்வோர் எண்ணிக்கை 12% குறைந்தது: பிரதமரின் ஆலோசனை குழு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: