புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது 15 நாடுகள் மட்டுமே உள்ளன. அதிலும் 5 நாடுகள் மட்டுமே வீட்டோ அதிகாரம் பெற்ற நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வரும் இந்தியாவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக சேர்க்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து கோரி வருகிறது. இந்தியாவுக்கான ஆதரவை ரஷ்யா மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை பிரச்னைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அப்போது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பிராக்க வேண்டும் என்ற கருத்தை ரஷ்யா மீண்டும் வலியுறுத்தியது.
The post சீர்திருத்தப்பட்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: ரஷ்யா மீண்டும் ஆதரவு appeared first on Dinakaran.