அதற்கு ஒன்றிய கலாசார துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் பதிலளிக்கையில்,‘‘ சில இடங்களில் உள்ள முஸ்லிம் மத வழிபாட்டு தலங்கள் தொல்லியல் துறையால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் மத வழிபாட்டு தலங்களுக்கு அடியில் வேறு ஒரு மத வழிபாட்டு தலம் புதைந்து இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இந்த விவகாரத்தில் மதிப்பிற்குரிய நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளின்படி இந்திய தொல்லியல் துறை செயல்பட்டு வருகிறது’’ என்றார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கஜேந்திர சிங், சிந்து சமவெளி எழுத்துகள் உள்பட பல்வேறு பழங்கால எழுத்துகள் குறித்து வல்லுனர்களுடன் இந்திரா காந்தி தேசிய கலை மையம் தொடர்ந்து விவாதம் நடத்தி வருகிறது. இந்த விவாதங்களின் போது வல்லுனர்கள் இடையே பல விதமான கருத்துகள் நிலவுகின்றன என்று தெரிவித்தார்.
The post 2019க்கு பின் ஆய்வு செய்யப்பட்ட முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் எத்தனை? மாநிலங்களவையில் திரிணாமுல் எம்பி கேள்வி appeared first on Dinakaran.