இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த யூடியூபர் ஒருவர் சமூக ஊடகங்களில் நேற்று முன்தினம் ஒரு வீடியோ பதிவிட்டார். அதில், சாலையில் கட்டுக்கட்டாக பணத்துடன் போஸ் கொடுக்கும் அவர், பின்னர் அந்த பணத்தை யார் வேண்டுமானாலும் அள்ளி செல்லலாம் எனக்கூறி நடுரோட்டில் வீசி எறிகிறார். அதனை அவ்வழியாக செல்பவர்கள் அள்ளி சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் நேற்று முன்தினம் வைலரானது.
இதைக்கண்ட ஐதராபாத் போலீசார் அந்த நபர் குறித்து விசாரித்து வந்த நிலையில், அவர் ஐதராபாத்தை சேர்ந்த சந்து(30) என்பது கண்டுபிடித்து நேற்று முன்தினம் இரவு அவரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் இன்ஸ்டாகிராமில் ஒரேநாளில் தனது பாலோயர்ஸ் எண்ணிக்கை அதிகரிக்க இதுபோன்று நடந்து கொண்டதாக தெரிவித்தார். அவர் வீசி எறிந்த பணத்தின் மதிப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.
The post ஒரேநாளில் அதிக `பாலோயர்ஸ்’ ஆசைக்காக நடுரோட்டில் கட்டுக்கட்டாக பணம் வீசிய யூடியூபர் கைது appeared first on Dinakaran.