மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

செங்கல்பட்டு: சந்தேகத்தின்பேரில் மனைவியை கொலை செய்த வழக்கில் மகிளா நீதிமன்றம் கணவருக்கு ஆயுள் தண்டனை மற்றம் ரூ.6 ஆயிரம் அபராதம் வழங்கி பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. சென்னை பள்ளியகரணை பாரதிதாசன் முதல் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (48), மகாலட்சுமி (40) தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இதனை தொடர்ந்து, சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்தி வந்துள்ளார். மேலும் கிருஷ்ணமூரத்தியின் மனைவி மகாலட்சுமி வீட்டு வேலை செய்து வருகின்றார்.

வேலை முடிந்து மகாலட்சுமி வீட்டிற்க்கு வரும் போது ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறாய், ஏன் ஆட்டோவில் வந்து வீட்டில் இறங்குகிறாய் என தன் மனைவி மீது சந்தேகப்பட்டு சத்தம் போட்டு மனையை தாக்கி பணம் வாங்கி மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு மது அருந்துவிட்டு வந்த கிருஷ்ணமூர்த்தி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மனைவி மகாலட்சுமியின் கழுத்தில் குத்தியதில் மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திக்கு விரைந்து வந்த பள்ளியகரணை போலீசார் மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணமூர்த்தியின் மகன் குணால் கொடுத்த புகாரின் அடிப்படையில், பள்ளியகரணை போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி நேற்று குற்றவாளி கிருஷ்ணமூர்த்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதம் வழங்கி தீர்ப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து கிருஷ்ணமூரத்தியை பலத்த போலீசாரின் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

The post மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: