இந்நிலையில் மூத்த மகனுக்கு அம்மை போட்டதால் கடந்த 7ம் தேதி ஜீவாவும் இளைய மகனும் திருப்பத்தூர் சென்றனர். இதனை தொடர்ந்து, நேற்றுமுன்தினம் மாலை காக்களூரை சேர்ந்த ஒருவர் ஜீவாவை தொடர்பு கொண்டு உங்களது வீட்டில் கணவர் தினேஷ் குமார் தூக்கிட்டு கொண்டார். அவரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தோம். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார் என்று தெரிவித்துள்ளார். இதைக்கேட்டதும் ஜீவா அதிர்ச்சி அடைந்து காக்களூருக்கு விரைந்தார். இதனையடுத்து திருவள்ளூர் தாலுகா போலீசில் ஜீவா புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சிக்கன் கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை: மனைவி போலீசில் புகார் appeared first on Dinakaran.