3ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் சீண்டல்; தலைமை ஆசிரியரை தொடர்ந்து ஆசிரியையும் போக்சோவில் கைது

திருத்தணி: மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் கடந்த மாதம் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பள்ளியின் உதவி ஆசிரியை போக்சாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளிப்பட்டு பேரூராட்சி ஆஞ்சநேய நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் செங்கல்வராயன் (59) என்பவரை திருத்தணி மகளிர் காவல் நிலைய போலீசார் கடந்த மாதம் 18ம் தேதி போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

அப்பள்ளியில் உதவி ஆசிரியையாக பணிபுரிந்த ரமணி வேறு பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டார். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரின் நடவடிக்கை குறித்து உதவி ஆசிரியையிடம் மாணவி தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளாமல் உண்மையை மறைத்து விட்டதாகவும், தலைமை ஆசிரியரின் பாலியல் பலாத்காரத்தை மூடி மறைக்க உடந்தையாக செயல்பட்டதாகவும் எழுந்த புகாரை தொடர்ந்து தலைமை ஆசிரியர் ஒரு மாதத்திற்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், உதவி ஆசிரியை ரமணி மீதும் போக்சோ சட்டத்தில் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மலர் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

The post 3ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் சீண்டல்; தலைமை ஆசிரியரை தொடர்ந்து ஆசிரியையும் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: