முக்கியமாக, அறுவை சிகிச்சை மூலம் நாக்கையும் இரண்டாக பிளந்து கொண்டுள்ளார். அறுவை சிகிச்சை செய்வது குறித்த பயிற்சியை அவர் மும்பையில் கற்றுக் கொண்டதாக தெரிகிறது. தொடர்ந்து, திருச்சி வந்த ஹரிஹரன், திருவெறும்பூர் கூத்தைப்பாரை வடக்கு தெருவை சேர்ந்த ஜெயராமன்(24) என்பவரை தனது டாட்டூ கடைக்கு அழைத்துள்ளார். கடந்த 9ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஜெயராமனின் நாக்கை இரண்டாக பிளந்தார். இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் ஹரிஹரன் வெளியிட்டார். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, ஹரிஹரன், நண்பர் ஜெயராமன் ஆகியோரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சாதாரண முறையில் டாட்டூ வரைந்தால் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் இல்லை. தொடர்ந்து, வித்தியாசமான முறையில் டாட்டூ வரைய வேண்டும் என்பதற்காக ஹரிஹரன் மும்பை சென்று, அங்கு நாக்கை இரண்டாக பிளக்கும் ஆபரேஷன் செய்வது எப்படி என்பது குறித்து பயிற்சி பெற்றுள்ளார். திருச்சியில் இதுவரையிலும் 4 பேருக்கு நாக்கை இரண்டாக பிளந்து அறுவை சிகிச்சை செய்துள்ளார். முக்கியமாக, கைகளில் உருவ படங்களை வரைவது, வயிற்று பகுதியில் வித்தியாசமான முறையில் டாட்டூ வரைவது, அந்தரங்க பகுதியில் ஆபாசமாகவும், ஆபாச சைகை காட்டும் வகையிலும் டாட்டூ வரைந்துள்னார். இவ்வாறு வரையப்படும் டாட்டூகளுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்துள்ளார். இதன் மூலம் மாதம் ரூ.4 லட்சம் வரை சம்பாதித்துள்ளார்’ என்றனர்.
The post கை முதல் அந்தரங்க பாகம் வரை உடலில் ஆபாச ‘டாட்டூ’ போட்டு மாதம் ரூ.4 லட்சம் சம்பாதித்த டிசைனர்: நாக்கை இரண்டாக பிளந்து ஆபரேஷன் செய்த விவகாரத்தில் பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.