சாலையின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த வாலிபர், திடீரென சாலையின் குறுக்கே ஓடி சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் முன் சக்கரத்தில் அப்படியே தலை வைத்து படுத்துக் கொள்கிறார். இதில், அந்த லாரியின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. மேலும் இறந்து போன வாலிபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓடும் லாரியின் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தற்போது அந்த சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
The post லாரியின் குறுக்கே விழுந்து வாலிபர் தற்கொலை: வீடியோ வைரல் appeared first on Dinakaran.