தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீப்பிடித்து எரிந்துக்கொண்டிருந்த கன்டெய்னர் லாரியில் தண்ணீரை பீய்ச்சி அடித்து, சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கன்டெய்னர் லாரியில் இருந்த டிஷ்யூ பேப்பர் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. ஆனால், லாரி எரிவதற்குள் தீ மேலும் பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தடுத்தனர். இதுகுறித்து, மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post உயரழுத்த மின்கம்பியில் உரசியதில் தீப்பிடித்து எரிந்த கன்டெய்னர் லாரி appeared first on Dinakaran.