மாமல்லபுரம் மரகத பூங்காவில் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணிகள் நிறுத்தம்: முடக்கமா என சுற்றுலா பயணிகள் அச்சம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம், மரகத பூங்காவில் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணிகளை ஒன்றிய அரசு திடீரென நிறுத்தி வைத்துள்ளது. இதனால், ஒளிரும் தோட்ட பணிகள் முடங்கி விடுமோ என அச்சம் அடைந்துள்ளனர். உலக அளவில் சுற்றுலாவுக்கு பெயர் போன ஊராக மாமல்லபுரம் பார்க்கப்படுகிறது. இங்கு, கடந்த 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ மன்னர்கள் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை அழுகுர வடித்தனர். புராதன சின்னங்கள் பகுதியில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் எந்தவிதமான கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என தொல்லியல் துறை தடை உள்ளது. இந்நிலையில், பழைய சிற்பக் கல்லூரி சாலையில் 2.47 ஏக்கர் பரப்பளவு கொண்ட மரகத பூங்காவில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், தனியார் பங்களிப்புடன் ரூ.6 கோடி மதிப்பீட்டில் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

மரகத பூங்காவுக்கு அருகே பழைய அர்ஜூனன் தபசு சிற்பம் உள்ளது. மேலும், மரகத பூங்காவில் ஒளிரும் தோட்டம் பணிக்காக ராட்சத பள்ளங்கள் தோண்டி கடந்த வாரம் கான்கிரீட் போடும் போது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும், அங்கு அடுத்தடுத்து ராட்சத பள்ளம் தோண்டுவதால் மண் சரிவு ஏற்படும் அபாய நிலை உள்ளது. இதனால், அங்கு பணிகள் மேற்கொள்ளக் கூடாது என தொல்லியல் துறை சார்பில் நோட்டீஸ் கொடுத்து, ஒளிரும் தோட்ட பணிகளை ஒன்றிய அரசு திடீரென முடக்கி உள்ள சம்பவம் சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மாமல்லபுரம் மரகத பூங்காவில் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணிகள் நிறுத்தம்: முடக்கமா என சுற்றுலா பயணிகள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: