பின்னர் மகன் ரோகித்துக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் கொடுத்துவிட்டு அருண்குமார் வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் மாலை 5.30 மணியளவில் மகனுக்கு போன் செய்தபோது, அவர் பதிலளிக்கவில்லை. இதனால் வீட்டின் அருகில் வசிக்கும் மகனின் நண்பனான ஜீவாவுக்கு போன் செய்து, வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். ஜீவா அங்கு சென்று பார்த்தபோது கழிவறையில் மயங்கிய நிலையில் ரோகித் கிடந்துள்ளார். உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து உடனடியாக தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே ரோகித் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த தகவலின் பேரில் தரமணி போலீசார் அங்கு சென்று ரோகித் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்பிற்கு காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவம் அறிந்து சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளும் அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அவர்கள் வீட்டில் இருந்த குடிநீரை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
The post காய்ச்சல், வயிற்றுப்போக்கால் பாதித்த சிறுவன் திடீர் மரணம்: அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.