துரைப்பாக்கம்: திருவல்லிக்கேணி தீர்த்தபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருவல்லிக்கேணி தீர்த்தபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருந்து நேற்று மீட்கப்பட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி தீர்த்தபாலீஸ்வரர் கோயிலுக்கு, சர்வே எண் 826/1-ல் 560 சதுரடி பரப்பிலான வணிக மனை மற்றும் சர்வே எண் 826/8ல் 2,886 சதுரடி பரப்பிலான குடியிருப்பு மனை என மொத்தம் 3,446 சதுரடி சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருந்தன. இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78ன் கீழ், சென்னை மண்டலம்-2 இணை ஆணையர் உத்தரவின் படி, இந்த சொத்துகள் உதவி ஆணையர் பாரதிராஜா முன்னிலையில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரின் உதவியுடன் நேற்று மீட்கப்பட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.
The post ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து ரூ.3.5 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு appeared first on Dinakaran.