கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணிமுக்தா நதி அணையிலிருந்து 06.12.2024 முதல் 25.02.2025 வரை 82 நாட்களுக்கு 556.26 (590.00- 33.74 = 556.26) மில்லியன் கனஅடி மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் உள்ள 4250 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.