தனது கோரிக்கை தொடர்பான பல்வேறு போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளார். ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் ஆகியோரது அமர்வில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் வாஞ்சிநாதன் ஆஜராகி வந்தார். தற்போது வேறொரு வழக்கறிஞர் ஆஜராகி வருகிறார். இந்த வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று முன்தினம் பிற்பகலில் வாஞ்சிநாதன் ஆஜரானார்.
அப்போது அவரிடம், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘உங்களது நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நீங்கள் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்புகள் குறித்தும், சாதிய ரீதியாக தீர்ப்புகள் வழங்குவதாகவும் என் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறிவருகிறீர்கள். இது குறித்து தங்களின் தற்போதைய நிலை என்னவென கூறுகிறீர்கள்’’ என்றார். அப்போது வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ‘‘குற்றச்சாட்டு எது என குறிப்பிட்டு கூறினால் பதிலளிக்கிறேன்’’ என கூறியுள்ளார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வரும் 28ம் தேதி மதியம் 1.15 மணிக்கு இந்த நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக வேண்டும். அப்போது எழுத்துப்பூர்வமான கேள்விகள் வழங்கப்படும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
The post நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்றத்தில் புகார் கொடுத்த விவகாரம்: வக்கீல் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.
