இதனால் இந்த பகுதியில் கனரக வாகனங்களின் போக்குவரத்து பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்த சாலை வழியாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, போரூர், ஐயப்பன்தாங்கல், மதுரவாயல், வானகரம், நூம்பல், துண்டலம், செட்டியார்அகரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர். இந்த சாலை மோசமாக இருப்பதால் பல கிமீ தூரத்திற்கு பொதுமக்கள் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பகுதிக்கு புதிய தார் சாலை அமைக்க ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி கூறியதாவது: வேலப்பன்சாவடியில் இருந்து நூம்பல் செல்லும் சாலை சேதம் அடைந்ததையடுத்து பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான சா.மு.நாசர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி இந்த சாலையை புதுப்பித்து தர வலியுறுத்தினார். அமைச்சரின் தொடர் முயற்சியால் அரசு சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மானியமாக ரூ.80 லட்சமும், பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.40 லட்சமும் என ரூ.1.20 கோடி புதிய தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் டெண்டர் கோரப்பட்டு வேலப்பன்சாவடியில் இருந்து நூம்பல் செல்லும் பிரதான சாலை புதிய தார் சாலையாக விரைவில் அமைக்கப்படும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.
The post வேலப்பன்சாவடி – நூம்பல் பிரதான சாலையில் புதிய தார்சாலை அமைக்க ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.