இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அணை முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. பின்னர் நேற்று மதியம் 2500 கன அடியாக உயர்த்தப்பட்டு உபரிநீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடியது. பள்ளிப்பட்டு அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் நேற்று அதிகாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கீழகால் பட்டடை, நெடியம், சாமந்தவாடா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 தரைப் பாலங்கள் முற்றிலும் நீரில் மூழ்கின. 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கரையோர கிராம மக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் என்று திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கிராம முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு
வருகின்றனர். மேலும் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்காக விடையூர் – கலியனூர் மேம்பால பணியும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் அடுத்த விடையூர் – கலியனூர் இடையே உள்ள கொசஸ்தலை ஆற்றில் 2016 – 2017ம் ஆண்டு ரூ.3.60 கோடியில் 120 மீட்டர் தூரத்திற்கு தொடங்கப்பட்ட மேம்பால பணிகள் தற்போது பாதியில் நிறுத்தப்பட்டது.
இதனால் மேல்விளாகம், கலியனூர், மணவூர், நெமிலியகரம், குப்பம் கண்டிகை, ராஜபத்மாபுரம், மருதவல்லிபுரம், ஒண்டிகுச்சி, சின்னம்மா பேட்டை, ஜாகிர் மங்கலம், பழையனூர், காபுல் கண்டிகை உள்பட 13 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் 15 கிமீ சுற்றிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆபத்தான முறையில் சேற்றில் இறங்கியும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பாலத்தின் மீது ஏறியும் சென்று வருகின்றனர். எனவே ஆமை வேகத்தில் நடைபெற்றுவரும் மேம்பால பணியை அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் பெய்த கனமழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு தண்ணீரில் மூழ்கிய 3 தரைப்பாலங்கள்: விடையூர் – கலியனூர் மேம்பாலப்பணி நிறுத்தம்; கிராம மக்கள் போக்குவரத்து துண்டிப்பு appeared first on Dinakaran.