திருவள்ளூர், டிச. 5: விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வில் கலந்து கொள்ள இயலாத நபர்களுக்கு நேர்முக தேர்வில் கலந்து கொள்ள நாளை 6ம் ேததி மறுவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என மண்டல இணைப்பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட மண்டல இணைப்பதிவாளர் தி.சண்முகவள்ளி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களில் 75 விற்பனையாளர் பணியிடங்கள் மற்றும் 34 கட்டுநர் பணியிடங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், கடந்த நவம்பர் 25ம் தேதி முதல் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நேர்முக தேர்வில் கலந்து கொள்ள இயலாத நபர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கும் வகையில் 6ம் தேதி பிற்பகல் 1 மணியளவில் நடைபெற உள்ள நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம் என இவ்வாறு மண்டல இணைப்பதிவாளர் கூறியுள்ளார்.
The post விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வுக்கு நாளை மறுவாய்ப்பு: மண்டல இணைப்பதிவாளர் தகவல் appeared first on Dinakaran.