திருத்தணி: திருத்தணி அருகே நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. பெஞ்சல் புயலால் திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், நீர்நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் சோளிங்கரில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பெரிய ஏரி முழுமையாக நிரம்பி உபரிநீர் நந்தி ஆற்றில் கலந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் திருத்தணியில் இருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பாப்பிரெட்டிபள்ளி பகுதியில் உள்ள நந்தி ஆற்றின் தரைப்பாலம் முழுமையாக மூழ்கியது. இதனால், அச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஆற்றின் இருபுறமும் தடுப்பு வேலி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கால் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் ஆற்றின் கரைப் பகுதிக்குச் சென்று கண்டு ரசித்து வருகின்றனர்.
The post நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு திருத்தணி-பொதட்டூர்பேட்டை சாலையில் போக்குவரத்து நிறுத்தம் appeared first on Dinakaran.