நிலக்கடலை ஏலத்தில் விலை உயர்வு: அதிக பட்சமாக கிலோ ரூ.78க்கு விற்பனை

க.பரமத்தி, நவ.13: சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை கிலோவிற்கு ரூ.6உயர்ந்து ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி ஒன்றியத்தில் அணைப்பாளையம், அஞ்சூர், ஆரியூர், அத்திப்பாளையம், சின்னதாராபுரம், எலவனூர், கூடலூர் கிழக்கு, கூடலூர் மேற்கு, கார்வழி, காருடையம்பாளையம், கோடந்தூர், குப்பம், மொஞ்சனூர், முன்னூர், புஞ்சைகாளகுறிச்சி, நடந்தை, நெடுங்கூர், க.பரமத்தி, பவித்திரம், நஞ்சைகாளகுறிச்சி, புன்னம், இராஜபுரம், சூடாமணி, தென்னிலை கிழக்கு, தென்னிலை மேற்கு, தென்னிலை தெற்கு, தொக்குப்பட்டி, துக்காச்சி, தும்பிவாடி, விஸ்வநாதபுரி ஆகிய 30-ஊராட்சிகள் மட்டுமல்லாது கரூர் ஒன்றிய பகுதியான புகழூர், வேலாயுதம்பாளையம், நொய்யல், சேமங்கி, நடையனூர், மறவாபாளையம், தவிட்டுப்பாளையம், திருக்காடுதுறை, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஊர்களில் இரு வெவ்வேறு ஒன்றிய கிராம புற பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.

மேற்கண்ட பகுதிகளில் விளையும் நிலக்கடலை இயற்கையிலேய அதிக சுவையுடன் இருக்கும் என்பதாலும், எண்ணெய் உற்பத்திக்கு ஏற்றதாக இருக்கும் என்பதாலும் வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு விவசாய நிலத்திலேயே கொள்முதல் செய்வர்களாம். தற்போது கொரோனா தொற்று ஊரடங்கிற்கு பிறகு இப்போதோ நிலைமை தலை கீழாக உள்ளது.

வெளியூர் வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன் வராததாலும் வந்த ஒரு சிலரும் மிகவும் குறைந்த விலைக்கு கேட்பதால் விவசாயிகள் பலர் மலிவு விலைக்கு விற்க மனமில்லாமல் பலர் கடலையை காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுக்கின்றனர். பிறகு மீதம் உள்ள கடலையை மூட்டைகளாக கட்டி அருகேயுள்ள வெளி மாவட்ட பகுதியில் இயங்கும் கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

அங்கு நடந்த ஏலத்தில் 250 மூட்டை எடைகாக நடந்த ஏலத்தில் நிலக்கடலை கிலோவிற்கு குறைந்த பட்சமாக ரூ.63க்கும், அதிக பட்சமாக ஒரு கிலோவிற்கு ரூ.78 க்கும் ஏலம் போனது. கடந்த வாரத்தை
விட கிலோவிற்கு ரூ.6 உயர்ந்து ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post நிலக்கடலை ஏலத்தில் விலை உயர்வு: அதிக பட்சமாக கிலோ ரூ.78க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: