கரூர் வெங்கமேடு அருகே கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்

கரூர், ஜன.9: கணவரை காணவில்லை என மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கரூர் வெங்கமேடு கொங்கு நகரைச் சேர்ந்தவர் புஷ்பவள்ளி. இவர், வெங்கமேடு காவல் நிலையத்தில் கடந்த 6ம் தேதி அளித்த புகாரில், கரூரில் உள்ள ஒரு கடைக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற தனது கணவர் இதுநாள் வரை வீடு திரும்பவில்லை என தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Stories: