கரூர், ஜன. 5: தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் மாநில அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கரூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு உத்திரவாதப்படுத்தப்பட்ட திட்டத்தினை அறிமுகப்படுத்தி புதிய ஒய்வூதிய திட்டத்தின் கீழ் பணியில் உள்ள ஊழியர்களுக்கும், பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் குறைந்த பட்ச ஒய்வூதியம் என்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த மாநில செயற்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த ஒய்வூதிய திட்டத்திற்காக தொடர் போராட்டங்களை நடத்திய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வது. சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவையை மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடத்துவது என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
