தாந்தோணி ஒன்றிய பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

கரூர், ஜன.12: தாந்தோணி ஒன்றிய பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை செந்தில் பாலாஜி எம்எல்ஏ வழங்கினார். கரூர் மாவட்டத்தில் உள்ள 734 நியாயவலைக்கடைகள் மூலம் 3,33,624 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை. 1 முழு நீளக் கரும்பு, ரூ.3,000 ரொக்கம் மற்றும் வேட்டி சேலை என மொத்தம் ரூ.100 கோடியே 8 லட்சத்து 72,000 ஆயிரம் மதிப்பீட்டிலான பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் தாந்தோணி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோயம்பள்ளி பகுதியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு இணைப்பதிவாளர் அபிராமி, தாந்தோணி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கோயம்பள்ளி பாஸ்கரன், கரூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் பி முத்துக்குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கரூர் மாவட்ட கசெயலாளர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ அரிசி ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கி சிறப்புரை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் பூவை ரமேஷ்பாபு, பொதுக்குழு உறுப்பினர்கள் காலனி செந்தில் ,சாலை சுப்பிரமணியன், ஊர் நாட்டாமை அபிராமி செந்தில், ஒன்றிய நிர்வாகிகள் சுப்பிரமணியன் பழனிச்சாமி, சுகுணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: