கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்

கரூர், ஜன. 7: அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாயர்கள் சங்கத்தின் சார்பில், மாவட்ட தலைவர் வாசுகி தலைமையில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும். குடும்ப ஒய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும்.

மே மாத விடுமுறையை ஒரு மாதமாக வழங்கிட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே அடையாள வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 325 பேர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

Related Stories: