கரூர், ஜன.9: கரூரில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி ரெயின்போ சதுரங்க அகாடமி சார்பில் நடைபெற்றது. இப்போட்டியானது 8வயதிற்கு உட்பட்டோர், 10 வயதுக்குட்பட்டோர்,12 வயதுக்குட்பட்டோர் மற்றும் 15 வயதுக்குட்பட்டார் ஆகிய நான்கு பிரிவுகளில் ஆண் பெண் என இரு பிரிவுகளில் நடைபெற்றது.
இந்த போட்டியில் மாணவ மாணவியர் உட்பட 360 கலந்து கொண்டனர்.போட்டி ஏற்பாடுகளை போட்டி அமைப்பாளர்கள் புகழேந்தி, அருண், சிவகுமார் ஆய்வு செய்து இருந்தனர்.போட்டியில் புதிதாக கலந்து கொண்ட மாணவ மாணவியருக்கு சதுரங்க போட்டி நுணுக்கம் பற்றிய அறிவுரை வழங்கப்பட்டது.
