பாலக்காடு, நவ. 6: பாலக்காடு சிதாரா கலையரங்கில் கேரள தமிழ் பேரவையின் மாவட்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை மொழி சிறுபான்மை நலத்துறை அமைச்சரும், கேரள மின்வாரிய அமைச்சருமான கே. கிருஷ்ணன்குட்டி தொடங்கி வைத்து பேசினார். உள்ளாட்சித்துறை மற்றும் கலால்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கேரள தமிழ்ப்பேரவை தலைவர் சடகோபாலன் தலைமை தாங்கினார். கேரளாவில் மொழி சிறுபான்மையினரின் கோரிக்கைகளை முதல்வர் பிணராயி விஜயனிடம் பேச்சுவார்த்தை உடனடியாக தீர்வு காணப்படும், பாலக்காடு நகராட்சி பகுதியை மொழி சிறுபான்மை பிரதேசமாக நிலை நாட்டப்படும் என அமைச்சர் உறுதியளித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து, முன்னாள் திட்ட வாரிய உறுப்பினர் ஜோண் மொழி சிறுபான்மையினருக்கு சட்டப்படியாக வழங்கக்கூடிய விவரங்கள் குறித்து பேரவை உறுப்பினர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். கூட்டத்தில் பேராயர் ஆர்பர்ட் ஆனந்தராஜ், பிராமண சபா மாவட்ட தலைவர் கரிம்புழா ராமன், ராவுத்தர் சங்க மாநில துணை தலைவர் அஷன் முகமது ஹாஜீ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக பேச்சிமுத்து வரவேற்றார். முடிவில் முரளி நன்றி கூறினார்.
The post பாலக்காட்டில் கேரள தமிழ்ப்பேரவை மாவட்ட கூட்டம்: அமைச்சர் துவங்கி வைத்தார் appeared first on Dinakaran.