மருத்துவமனை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த மர்மநபர்களால் பரபரப்பு

 

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தமிழ்நாடு அரசு தேயிலைத்தோட்டம் சேரம்பாடி டேன்டீ பகுதியில் டேன்டீ தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் கார்டன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பல்வேறு வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனை பல ஆண்டுகளாக ஒரு மருந்தகமாகவே செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் யாரும் இருப்பதில்லை இரவு காவலர் மட்டுமே இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் யாரோ மர்மநபர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் வந்து ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அதன்பின் மர்மநபர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து டேன் டீ அதிகாரிகள் நேற்று சேரம்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சேரம்பாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மருத்துவமனை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த மர்மநபர்களால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: