பள்ளிவாசல் அலுவலகத்தில் ரூ.6 லட்சம் திருடிய வாலிபர் கைது

பாலக்காடு, ஜூன் 4: ஒத்தப்பாலம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்மநபர் ஒருவர் புகுந்து அலுவலகத்தில் பிரோவில் பாதுக்கப்பட்டிருந்த 6 லட்சம் ரூபாயை திருடி சென்றுள்ளார். இது தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாகிகள் ஒத்தப்பாலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அஜீஷ், எஸ்.ஐ., சுனில், ஹரிதேவ் ஆகியோர் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து குற்றவாளியை சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்டுப்பிடித்தனர். ஒத்தப்பாலம் அருகே காளம்தொடியை சேர்ந்த அபுபக்கர் (28), என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரது மொபைல் போன் டவர் லோக்‌கேஷனை வைத்து மன்னார்க்காடு டவுன் பகுதியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று அபுபக்கரை கைது செய்தனர். இது தொடர்பாக வாலிபரிடம் போலீசார் விசாரணை செய்ததில் பள்ளிவாசல் அலுவலகத்திலிருந்து 6 லட்சம் ரூபாய் பணம் திருடியதை ஒப்புக்கொண்டார். திருடிய பணத்தில் யூசிட் கார் வாங்கியதாகவும், மீதி பணத்தை செலவழித்து விட்டதாகவும் கூறினார். பின்னர், அபுபக்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பள்ளிவாசல் அலுவலகத்தில் ரூ.6 லட்சம் திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: