புளியங்குடியில் உடல்நலக்குறைவால் இறந்த வாலிபரின் உடலை அடக்கம் செய்த போலீசார்

புளியங்குடி,அக்.25: புளியங்குடியில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த வாலிபரின் உடலை தமுமுக மருத்துவர் அணியுடன் இணைந்து அடக்கம் செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர். புளியங்குடி சிந்தாமணி பஸ் நிலையம் அருகே கடந்த 8ம்தேதி சுமார் 45 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு கிடந்தார். தகவலறிந்து விரைந்து வந்த புளியங்குடி எஸ்ஐ மாடசாமி மற்றும் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி கடந்த 12ம்தேதி உயிரிழந்தார்.

இருப்பினும் இறந்தவர் குறித்த விவரம் தெரியாததோடு நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரது உடலை பெற்று அடக்கம் செய்ய யாரும் வரவில்லை. இதுகுறித்து முறையாக அறிவித்தும் பலனில்லை. இதையடுத்து புளியங்குடி போலீசார் தமுமுக மருத்துவ அணியினருடன் இணைந்து வாலிபரின் உடலை நேற்றுமுன்தினம் அடக்கம் செய்தனர். நிகழ்வில் எஸ்ஐ மாடசாமி, காவலர்கள் சுப்பையா, காளிராஜ், நவமணி, தமுமுக சார்பில் மாவட்டச் செயலாளர் அப்துர் ரஹ்மான், செய்யது அலி, பாதுஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post புளியங்குடியில் உடல்நலக்குறைவால் இறந்த வாலிபரின் உடலை அடக்கம் செய்த போலீசார் appeared first on Dinakaran.

Related Stories: