தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

 

தஞ்சாவூர், அக். 25: தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று தஞ்சாவூரில் நடந்த நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட் டம், பேராவூரணியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் முகமது வகிமன்சூர் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் வீராச்சாமி வரவேற்றார்.

சங்கத்தின் மாநிலத் தலைவர் முகமது இப்ராகிம் பேசினார். மாநில அமைப்பு செயலாளர் கேசவன், மாநிலத் துணைத் தலைவர் பெரியசாமி, தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், சேக்தாவூது ஆகியோர் பேசினர். வேளாண் விளைபொருட்களுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்த ஆதார விலையை அறிவிக்க வேண்டும். பயிர்க்காப்பீட்டு திட்டத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும். தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

பாசனத்துக்கு முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும். பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், ஒரத்தநாடு, திருவோணம் பகுதிகளில் பாசன ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தஞ்சாவூரில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில், காவிரி பாதுகாப்பு மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட அமைப்பு செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

The post தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: