சித்தி வளாக திருமாளிகையில் சன்மார்க்க கொடி கட்டுதல் விழா

 

வடலூர், அக். 25: மேட்டுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள வள்ளலார் சித்தி பெற்ற வளாகத்தில் 152வது ஆண்டு சன்மார்க்க கொடி கட்டுதல் விழா நடந்தது. வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் சித்தி வளாக திரு மாளிகையில் முதன் முதலில், ஐப்பசி மாதம் ஏழாவது நாள் 1873ம் ஆண்டு சன்மார்க்க சங்கத்திற்கு மஞ்சள், வெள்ளை வர்ணம் பொருந்திய கொடியை கட்டி பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு வள்ளலார் உபதேசம் செய்தார்.

இந்நிலையில் 152வது ஆண்டு சன்மார்க்க கொடி கட்டுதல் விழா மேட்டுக்குப்பம் சித்தி வளாக திரு மாளிகையில் நேற்று நடந்தது. இந்த விழாவையொட்டி மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் முழுவதும் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதில் சன்மார்க்க அன்பர்கள் திருவருட்பா பாடல்களை பாடிய வண்ணம், மஞ்சள் வெள்ளை வர்ணம் பொருந்திய கொடியை கொடி மரத்தில் ஏற்றினர்.

அப்போது கொட்டும் மழையிலும் சன்மார்க்க அன்பர்கள், பக்தர்கள் அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற மகா மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தனர்.

The post சித்தி வளாக திருமாளிகையில் சன்மார்க்க கொடி கட்டுதல் விழா appeared first on Dinakaran.

Related Stories: