திருத்துறைப்பூண்டியில் இலவச சட்ட உதவிகள்பெற கட்டணமில்லா தொலைபேசி

 

திருத்துறைப்பூண்டி, அக். 25: திருத்துறைப்பூண்டியில் வட்ட சட்டபணிகள் குழு சார்பாக இலவச சட்ட உதவிகள் பெற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகவிழா மற்றும் சார்பு நீதிமன்ற நீதிபதி குற்றவியல் நடுவர் மற்றும் நீதிபதி விரைவு நீதிமன்ற நீதிபதிகள் அறிமுகப்படுத்தினர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு, இலவச சட்ட உதவிக்கு தொடர்பு கொள்ள கட்டணமில்லா உதவி எண் 15100 அறிமுக விழா திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

சார்புநீதிபதி ரவிச்சந்திரன், திருத்துறைப்பூண்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அருண், திருத்துறைப்பூண்டி விரைவு குற்றவியல் நீதிபதி மாணிக்கம் உள்ளிட்டோர் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தினர். பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இந்த தொலைபேசி எண்கள் மூலம் தெரிவித்து இலவச சட்ட உதவிகள் பெறலாம். சட்ட உதவிகள் பெற இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மூத்த மற்றும் இளம் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் வட்ட சட்ட பணிக்குழு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

The post திருத்துறைப்பூண்டியில் இலவச சட்ட உதவிகள்பெற கட்டணமில்லா தொலைபேசி appeared first on Dinakaran.

Related Stories: