பள்ளிப்பட்டு அருகே மாட்டுத்தொழுவமாக மாறிய நிழற்குடை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே, ரூ3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை மாட்டு தொழுவமாக மாறியுள்ளது. இதனை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே, பெருமாநல்லூரில் கடந்த ஆண்டு திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ3.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பேருந்து நிழற்குடை கட்டப்பட்டது. இப்பேருந்து நிழற்குடையை, சில மாதங்களுக்கு முன்பு திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ திறந்துவைத்தார்.

இந்நிலையில், இப்பேருந்து நிழற்குடை இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என பொதுமக்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையில், இந்த புதிய பேருந்து நிழற்குடையில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கால்நடைகளை கட்டிவைத்து, வைக்கோல் போட்டு குப்பைபோல் குவித்து வைத்துள்ளனர். இதனால், புதிய பேருந்து நிழற்குடை புதுப்பொழிவை இழந்ததோடு மட்டுமல்லாமல், பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் இந்த புதிய பேருந்து நிலையத்தில் கால்நடைகளை கட்டுவததை தடுக்க நடவடிக்கை எடுத்து, இதனை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விடவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பள்ளிப்பட்டு அருகே மாட்டுத்தொழுவமாக மாறிய நிழற்குடை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: