ஸ்ரீ நிகேதன் பள்ளியில் அயோடின் குறைபாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவள்ளூர்: ஸ்ரீ நிகேதன் பள்ளியில் அயோடின் குறைபாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அயோடின் போதுமான அளவு பயன்பாடு குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கும் அயோடின் குறைப்பாட்டின் விளைவுகளை முன்னிலை படுத்துவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அயோடின் குறைபாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் ப.விஷ்ணுசரண் உத்தரவின் பேரில் நடந்தது.

இதில் பள்ளியின் முதன்மை செயல் அலுவலர் பரணிதரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை ஸ்டெல்லா ஜோசப், துணை முதல்வர் கவிதா கந்தசாமி, தலைமை ஆசிரியை சுஜாதா பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலர் ம.ஜெகதீஷ் சந்திரபோஸ் மாணவர்களுக்கு அயோடின் குறைபாடு மற்றும் தினசரி உணவில் அயோடின் நுண் சத்துக்கான முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினார். இதில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவசங்கரன் மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

The post ஸ்ரீ நிகேதன் பள்ளியில் அயோடின் குறைபாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: