திருமுல்லைவாயலில் மகளிர் தொழில் முனைவோர் பொதுக்குழு கூட்டம்

ஆவடி: திருமுல்லைவாயில் மகளிர் தொழில் முனைவோர் சங்கத்தின் சார்பாக 21வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அறிவித்தனர். இதன் தொடர்ச்சியாக 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும்படி தமிழக அரசு, சிட்கோ நிர்வாகம் மற்றும் மின்சார துறைக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி, 21 ஆண்டுகளாகியும் பெண் தொழில் முனைவோராகிய நாங்கள், எங்கள் இடத்திற்கு பட்டா இல்லாமல் சிரமத்தில் தொழில் நடத்திக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய தொழிலை மேலும் விரிவாக்கம் செய்ய முடியாத நிலமை உள்ளது.

ஆகையால் பட்டா வழங்க வேண்டும். எங்களுக்கு மின்சாரத் துறையின் புதிய கட்டணத்தை திருப்பி பெற்று பழைய மின் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும், பராமரிப்பு பணியை விரைவாக சீர் செய்து எங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும், குடிநீர் கட்டணம் மற்றும் பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தக் கூடாது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் தலைவர் மல்லிகாதுரைராஜ், செயலாளர் ரேவதிபாஸ்கரன், பொருளாளர் ராதிகாசுரேஷ்பாபு, துணைச் செயலாளர் ரேவதிநடராஜ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

The post திருமுல்லைவாயலில் மகளிர் தொழில் முனைவோர் பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: