மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தோருக்கு அரசு விருதுகள்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகளை மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். இதன்படி, சிறந்த பணியாளர், சுயதொழில் புரிபவர் கை, கால்கள் பாதிக்கப்பட்டோர் அல்லது தொழுநோயில் இருந்து குணமடைந்தவர்கள், பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், அறிவுசார் குறையுடையோர்.

பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, சிந்தனையற்றோர், குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு, மன நோய், ரத்த உறையாமை அல்லது ரத்த ஒழுகு குறைபாடு, ரத்த அழிவுச்சோகை, ரத்தச் சோகை, நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு பண்முகக் கடினமாதல், நடுக்கு வாதம், பல்வகை குறைபாடு உடையோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். https://awards.tn.gov.in’’ என்ற வலைத்தளம் மூலமாக விண்ணப்பங்களை வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெற அதன் 2 நகல்களை திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

The post மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தோருக்கு அரசு விருதுகள்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: