சேலம், செப்.28: சேலம் வக்கீல் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் விவேகானந்தன் தலைமையில் நேற்று நடந்தது. செயலாளர் நரேஷ்பாபு, பொருளாளர் அசோக்குமார், நூலகர் கந்தவேல், துணைத்தலைவர் சுகவனேஸ்வரன், துணை செயலாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில், மேச்சேரி போலீஸ் ஸ்டேசனில் வக்கீல் பகத்சிங்கை, சட்டவிரோதமாக 3 மணிநேரம் சிறை வைத்ததை கண்டித்து 100 வழக்கறிஞர்கள் கையெழுத்து போட்டு கொடுத்த மனு மீது ஆலோசனை செய்யப்பட்டது. இதையடுத்து வக்கீலை சிறை வைத்ததை கண்டித்து வருகிற வருகிற 30ம்தேதி(திங்கள்) ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துவது எனவும், நீதிமன்ற நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், வெங்கடேஷ், வெற்றிவேல், விஜயகுமார், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post 30ம் தேதி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு appeared first on Dinakaran.