கெங்கவல்லி, ஜூன் 7: கெங்கவல்லி பேரூராட்சி இலுப்புதோப்பு பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், எஸ்எஸ்ஐ ராமர் மற்றும் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, அங்குள்ள பஸ் ஸ்டாப் பகுதியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களில் சின்னமணி என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
The post கெங்கவல்லியில் சூதாடியவர் கைது appeared first on Dinakaran.