மேட்டூர், ஜூன் 3: வீரக்கல்புதூர் பேரூராட்சியில் சுயேட்சை கவுன்சிலர் செயல் அலுவலரை கண்டித்து அலுவலக நுழைவாயிலில் கணவருடன் போராட்டம் ஈடுபட்டார். வீரக்கல்புதூர் பேரூராட்சி 12வது வார்டு சுயேட்சை உறுப்பினர் லதா. இவரது கணவர் பிரபு. 12வது வார்டில் பொது மக்களுக்கு குடிநீர் இணைப்பு, கட்டிட வரைபட அனுமதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர கோரினால் செயல் அலுவலர் அலட்சியப்படுத்துவதாக கூறி நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். வீரக்கல் புதூர் பேரூராட்சி அலுவலகத்தின் நுழைவாயிலில் பாய் மற்றும் படுக்கையுடன் கணவர் மனைவி இருவரும் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை தங்களது வார்டுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர். இவர்களது போராட்டம் காரணமாக அலுவலக பணியாளர்கள் அனைவரும் அலுவலகத்தை விட்டு வெளியேறினர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என சுயேட்சை கவுன்சிலர் லதாவும், அவரது கணவர் பிரபுவும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.
The post சுயேட்சை கவுன்சிலர் கணவருடன் போராட்டம் appeared first on Dinakaran.