ஓமலூர், ஜூன் 5: ஓமலூர் தீயணைப்பு நிலையம் சார்பில், பருவமழையை முன்னிட்டு, மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை, கோட்டமேட்டுபட்டி ஏரியில் நடத்தப்பட்டது. நிலைய அலுவலர் தர்மலிங்கம் மற்றும் தீயணைப்பு வீரர்கள், மீட்பு பணி ஒத்திகையில் ஈடுபட்டனர். ஏரி தண்ணீரில் சிக்கியவர்களை எளிதாக மீட்பது, பேரிடரில் சிக்கியவர்களை கைவசமுள்ள பொருட்களை கொண்டு மீட்பது, முதலுதவி அளித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், தண்ணீர் கேன்கள், லாரி ட்யூப்கள் போன்றவைகளை கொண்டு மீட்கும் வழிமுறைகளை பொதுமக்கள் முன்னிலையில் செயல்முறை விளக்கமளித்தனர். இதில், கிராம மக்கள், பெண்கள் பலரும் கலந்து கொண்டனர்.
The post தீயணைப்பு துறையினர் பேரிடர் மீட்பு ஒத்திகை appeared first on Dinakaran.