ராசிபுரம் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோவில் சித்திரை தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தேவி ஶ்ரீ பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை தேர் திருவிழா கடந்த சித்திரை மாதம் 2ஆம் கொடியேற்றத்துடன் தேர் திருவிழா தொடங்கியது.

திருவிழா துவங்கி ய முதல் சித்திரை 11 வரை பல்வேறு கட்டளைதாரர்கள் சார்பில் கருட வாகனம்,அனுமந்த வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம், ஜெயலட்சுமி வாகனம், யானை வாகனம்,குதிரை வாகனம் போன்றவற்றில் அலங்கரிக்கப்பட்டு சுவாமி திருவீதி விழா அழைத்து வரப்பட்டது.

இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் விழாவிற்கு ஶ்ரீ பொன் வரதராஜ பெருமாள் சுவாமி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் நேற்று காலை எழுந்தருளினார். பின்னர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தேரோட்டம் தொடங்கி பெரிய கடைவீதி,சின்ன கடைவீதி,உள்ளிட்ட வழியாக சென்று இறுதியாக கடை வீதியில் சென்று முடிவடைந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்துச் சென்றனர். மேலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்… தேர் திருவிழா அலையொட்டி மயிலாட்டம். குதிரை ஆட்டம் பூங்கரகம் போன்ற நடனங்கள் நடைபெற்றது.

The post ராசிபுரம் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோவில் சித்திரை தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: