பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!


மணிலா: இந்தியாவிடமிருந்து பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ் ஒப்பந்தம் செய்தது. இந்தியா-ரஷ்யா கூட்டு நிறுவனமான பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் நீர் மூழ்கி கப்பல்கள், போர்க்கப்பல்கள், போர்விமானங்கள் மற்றும் நிலத்தில் இருந்து இலக்கை தாக்கும் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. இவை ஒலியின் வேகத்தை விட 3 மடங்கு அதிவேகமாக செல்லக்கூடியவையாகும். இந்தியா பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதியும் செய்து வருகிறது.

அந்த வகையில் இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் கொள்முதல் செய்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே 2022ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தப்படி இந்தியாவிடமிருந்து 375 மில்லியன் டாலர்களுக்கு பிரமோஸ் ஏவுகணையை பிலிப்பைன்ஸ் கொள்முதல் செய்தது. இந்நிலையில், பிலிப்பைன்ஸ் கொள்முதல் செய்த பிரமோஸ் ஏவுகணையை இந்தியா இன்று வழங்கியுள்ளது. இந்தியாவில் இருந்து விமானப்படை விமானம் சி-17 மூலம் பிரமோஸ் ஏவுகணை அதற்கான பேட்டரி, உபகரணங்கள் பிலிப்பைன்ஸ் கொண்டு செல்லப்பட்டன.

பிலிப்பைன்ஸ் கொண்டுசெல்லப்பட்ட பிரமோஸ் ஏவுகணை அந்நாட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரம்மோஸ் ஏவுகணைகள் மேற்கு பிலிப்பைன்ஸ் கடலில் உள்ள பிலிப்பைன்ஸ் கடலோரப் பாதுகாப்புப் படைப்பிரிவின் திறன்களை கணிசமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.! appeared first on Dinakaran.

Related Stories: