திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் நாளை அதிகாலை 4 மணிக்கு ரயில் புறப்பட்டு காலை 9.50க்கு சென்னை வந்தடையும் எனவும் மறுமார்க்கமாக சென்னையில் நாளை மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 12 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, திருவண்ணாமலை நகருக்கான ரயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை இருந்து வருகிறது.

அதன்படி, திருவண்ணாமலை-சென்னை இடையே தினசரி இயக்கப்பட்ட பாசஞ்சர் ரயில் சேவையை, மீண்டும் இயக்க வேண்டும் என பக்தர்கள் அந்த பகுதி பொதுமக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையடுத்து சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து வேலூர் கண்ட்டோண்மென்ட் வரை தினசரி இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலை, தினமும் திருவண்ணாமலை வரை நீட்டித்து கடந்த வாரம் தெற்கு ரயில் திருச்சி கோட்டம் உத்தரவிட்டது.

அதோடு, இந்த ரயில் சேவை இன்று(2ம் தேதி) மாலை 6 மணிக்கு சென்னை பீச் ஸ்டேஷனிலும், திருவண்ணாமலையில் நாளை(3ம் தேதி) அதிகாலை 4 மணிக்கும் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

இதனால் பொதுமக்கள்பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்நிலையில், நிர்வாக காரணங்களால் அந்த ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் நேற்று மாலை அறிவித்திருக்கிறது. இந்நிலையில் தற்போது திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் நாளை அதிகாலை 4 மணிக்கு ரயில் புறப்பட்டு காலை 9.50க்கு சென்னை வந்தடையும் எனவும் மறுமார்க்கமாக சென்னையில் நாளை மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 12 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: