அமைதியாக நடந்து முடிந்தது மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09% வாக்குப்பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 72.09% வாக்குகள் பதிவாகி உள்ளன. தமிழ்நாட்டில் காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67% வாக்குகள் பதிவாகி உள்ளன. தருமபுரி தொகுதியில் 75.44%, சிதம்பரம் தொகுதியில் 74.87% வாக்குகள் பதிவாகி உள்ளன. சென்னையின் 3 தொகுதிகளிலும் கடந்த 2019 தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.

வடசென்னை தொகுதியில் 2019-ல் 64% பதிவாகி இருந்த நிலையில் தற்போது 69%-ஐ தாண்டியுள்ளது. தென்சென்னை தொகுதியில் கடந்த முறை 57% பதிவாகி இருந்த நிலையில் தற்போது 67.82%ஆக உயர்ந்துள்ளது. மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் 58.98% வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 67.35%ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 72.09% வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்னும் ஒருசில வாக்குச்சாவடி மையங்களில், டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் கடைசி ஒரு மணி நேரத்தில் 10% வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்னும் சில இடங்களில் டோக்கன் பெற்றவர்கள் காத்திருப்பதால் வாக்கு சதவீதம் சற்று அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

The post அமைதியாக நடந்து முடிந்தது மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09% வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: