நீங்க உண்மையான இந்து அனுதாபியா இருந்தா மாட்டிறைச்சி ஏற்றுமதியை தடுத்து நிறுத்தவும்: உ.பி. முதல்வருக்கு சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் கோரிக்கை

வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் மகா மேளா நடந்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் ஜோதிஷ்வர் மடத்தை சேர்ந்த சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் கடந்த 18ம் தேதி மவுனி அமாவாசை தினத்தன்று, புனித நீராட தனது சீடர்கள், ஆதரவாளர்களுடன் பல்லக்கில் வந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அதிக கூட்டம் இருப்பதால் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் பல்லக்கில் இருந்து இறங்கி நடந்து செல்லுமாறு தெரிவித்தனர். இதையடுத்து உள்ளூர் நிர்வாகத்தை கண்டித்து தனது முகாமில் 11 தினங்களாக தர்ணா போராட்டம் நடத்தி வந்த சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் கடந்த புதன்கிழமை(ஜன.28) போராட்டத்தை முடித்து கொண்டு வௌியேறினார்.

இந்நிலையில் நேற்று வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த், “நான் அங்கு 11 நாள்களாக அமர்ந்திருந்தபோது எந்த அதிகாரியும் வந்து என்னை புனித நீராட செல்லுமாறு சொல்லவில்லை. நாங்கள் இங்கே வந்தபோது எங்கள் நற்சான்றுகளை கேட்டார்கள், நாங்கள் கொடுத்தோம். இப்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் உண்மையான இந்து அனுதாபி என்பதை நிரூபிக்க சான்று வேண்டும். இந்துவாக இருப்பதற்கு முதல்படி உத்தரபிரதேசத்தில் 40 நாள்களுக்குள் பசு வதையை தடுத்து, மாட்டிறைச்சி ஏற்றுமதியை அவர் தடுத்து நிறுத்த வேண்டும்” என கூறினார்.

Related Stories: