திருப்பதி கோயில் நெய்யில் ரசாயன கலவை 20 கோடி ஸ்லோ பாய்சன் லட்டுகளை அறியாமல் பக்தர்கள் சாப்பிட்டுள்ளனர்: அறங்காவலர் குழு தலைவர் பேட்டி

திருமலை: திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு நேற்று கூறியதாவது : கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பெறப்பட்ட நெய் 100 சதவீதம் கலப்படம் செய்யப்பட்டது. விலங்குகள் கொழுப்பு இல்லை என சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக கூறி ஒய்.எஸ்.ஆர் காங்கிரசார் தற்போது கொண்டாடி யாகம் நடத்துகின்றனர். ஆனால் தற்பொழுது சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில் எந்த ஒரு இடத்திலும் கலப்படம் செய்யப்படவில்லை என கூறவில்லை. ஆனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் எந்த தவறும் நடைபெறவில்லை என சிபிஐ நற்சான்றிதழ் வழங்கியதாக கூறி வருகின்றனர். 60 லட்சம் கிலோ ரூ.250 கோடி மதிப்புள்ள ரசாயன கலவை கொண்ட ஸ்லோ பாய்சன் போன்ற நெய்யை பெற்று 20 கோடி லட்டுகள் தயார் செய்யப்பட்டது. இதனை பக்தர்களும் அறியாமல் சாப்பிட்டுள்ளனர் என்றார்.

Related Stories: