நெல்லை : நெல்லையில் வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு மாறாக தேநீர், ஜூஸில் சர்க்கரை சேர்த்த ஓட்டல் ரூ.10,000 நஷ்ட ஈடு தர உத்தரவிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளருக்கு நெல்லை ஓட்டல் நிர்வாகம் ரூ.10,000 நஷ்ட ஈடு வழங்க நெல்லை நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் தங்கதுரை 2025 மே 6ல் தனது பிறந்தநாளை கொண்டாட சக வழக்கறிஞர்களுடன் ஓட்டலுக்கு சென்றார். ஓட்டல் ஊழியர்களிடம் தெளிவாக தனக்கு சர்க்கரை இல்லாமல் தேநீர், ஜூஸ் கேட்டுள்ளார். ஓட்டல் ஊழியர்கள் சர்க்கரை சேர்க்கப்பட்ட தேநீர் மற்றும் ஜூஸை கொடுத்துள்ளனர். தங்கதுரை தொடர்ந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் நஷ்ட ஈடு தர உத்தரவிட்டது.
